Atlee Tweet About Andhaghaaram
Atlee Tweet About Andhaghaaram

அடுத்த படம் பற்றிய அறிவிப்பை ஆர்வ கோளாரில் செய்த தவறை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Atlee Tweet About Andhaghaaram : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியவர் அட்லி.

இந்த படங்களை தொடர்ந்து ஷாருக்கானை இயக்க தயாராகி வரும் அட்லி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

17 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்த நடிகர் – மாஸ்டர் படம் பற்றி பூரிப்புடன் அவர் பதிவிட்ட பதிவு.!

இப்படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டன்று வெளியானது. ட்ரைலரை பார்த்த பிரபலங்கள் பலரும் இது குறித்து பாராட்டி பதிவிட்டு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூறி வந்தார் அட்லி.

அதே சமயம் ஆர்வக்கோளாறில் தன்னுடைய ட்வீட்டிற்கு அவரே நன்றி கூறி கொண்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் டேய் என்ன போதையில இருக்கியா? என கலாய்த்து வருகின்றனர். பதிவை டெலிட் பண்ணு தல எனவும் கலாய்க்கின்றனர்.

அதன் பின்னர் அட்லி இந்த பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Atlee Tweet About Andhaghaaram
Atlee Tweet About Andhaghaaram
Atlee Tweet About Andhaghaaram
Atlee Tweet About Andhaghaaram