Atlee Trolls Meme Video

அட்லி படங்களின் காப்பி காட்சிகளைக் கண்டு பிடித்து நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.

Atlee Troll Meme Video : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அட்லி.

இவர் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் திரையுலகில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றிருந்தாலும் இது முழுக்க முழுக்க மௌனராகம் படத்தின் காப்பி என்ற விமர்சனத்துக்கும் உள்ளானது.

அந்த படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தின் கதையை உருவாக்க இரண்டு வருடங்கள் செலவிட்டதாக அட்லி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் சில முக்கிய காட்சிகள் Hollywood படத்தில் இருந்து அப்படியே காப்பி செய்யப்பட்ட நெட்டிசன்கள் வெளியிட்ட வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

இது காப்பி பண்ணவா ரெண்டு வருஷம்?? ஏன் 2ஜி-ல டவுன்லோட் போட்டிங்களா என கிண்டலடித்து வருகின்றனர்.

அதேபோல் மெர்சல் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தபாங் படத்தில் இருந்து சுடப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பிகில் படத்தின் காட்சிகள் அப்படியே ஹாலிவுட் படத்திலிருந்து தட்டி தூக்கப்பட்டு இருப்பதும் நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.