Atlee Sharuk Khan Movie Title
Atlee Sharuk Khan Movie Title

அட்லீ மற்றும் ஷாருக்கான் இணைய உள்ள படத்தின் நாயகி யார்? படத்தின் டைட்டில் என்ன? என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Atlee Sharuk Khan Movie Title : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இதே படங்களை தொடர்ந்து அட்லி அடுத்ததாக பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான கதையை ஷாருக்கானுடன் கூறி சம்மதம் வாங்கி விட்டார் அட்லி. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆம் அட்லீ, சாருக்கான் இணைய உள்ள இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சங்கி என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சங்கி என்ற டைட்டில் தமிழகத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வரும் ஒன்று என்பதால் இந்த டைட்டிலை கேட்டதும் என்னது இது தான் படத்துக்கு டைட்டிலா என பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஷாருக்கானுடன் அட்லியின் அடுத்த படம்.. இணையத்தில் லீக்கான செம மாஸ் சீக்ரெட்.!!