Atlee Reaction for Bigil Trailer | Thalapathy Vijay | Tamil Cinema | Kollywood Cinema News | Trending Cinema News | Bigil Official Trailer
பிகில் ட்ரைலரை பார்த்து விட்டு அட்லீ அதிருப்தியடைந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

Atlee Reaction for Bigil Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தான் இயக்கியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா, ஆனந்த ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது முதல் முதலாக பிகில் ட்ரைலரை உருவாக்கி இருந்த போது அதனை பார்த்து அட்லீ அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

பிகில் படம் வெளியாகும் FDFS அன்று எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பில்லை – சண்டையில் இறங்கிய ரசிகர்கள் .!

இதெல்லாம் சரிப்பட்டு வராது மொத்தமாக மாற்ற வேண்டும் என கூறி அதன் பின்னர் வேறொரு ட்ரைலரை உருவாக்கியதாக கூறுகின்றனர்.

இதனால் தான் ட்ரைலர் குறித்து ரசிகர்கள் கேட்டும் பல நாட்கள் படக்குழு வாய் திறக்கவில்லை என கூறுகின்றனர்.

அதே சமயம் நாளை வெளியாக உள்ள பிகில் ட்ரைலர் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.