Atlee post pic of Thalapathy 63 | Thalapathy Vijay | Nayanthara | AR.Rahman | Kathir | Atlee | Cinemka News | Latest Cinema News, Tamil Cinema News

Atlee post pic of Thalapathy 63 :

இப்படத்தின் பாடல் பதிவு சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த தளபதி 63 – வேற லெவல் அப்டேட்!

இப்படத்தின் பாடல் பதிவு சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த தகவலை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

எனினும் தற்போது இயக்குனர் அட்லி இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னொரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மெர்சல் கூட்டணி மீண்டும் இணைவதால் இப்படத்தின் பாடல்கள் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதன் விளைவாக இதன் இசை உரிமையை பிரபல சோனி நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Atlee (@atlee47) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.