Atlee Photo Mems : IPL-க்கு அட்லீ அணிந்து அந்த ஜாக்கெட்டின் விலை என்ன என்ற தகவல் தெரிய வர ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ தற்போது தளபதி விஜயை வைத்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இவ்வளவு பிஸியிலும் அட்லீ நேற்று நடந்த IPL மேட்ச்சிற்கு சென்றிருந்தார்.

அங்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து மேட்சை கண்டு களித்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அட்லீயின் கலரை வைத்து கண்டபடி கலாய்த்தெடுத்து வந்தனர்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்களோ அட்லீயின் கலரை கலாய்ப்பதெல்லாம் இருக்கட்டும். அவர் அணிந்து வந்துள்ள ஜாக்கெட்டின் விலை மட்டும் 17000 ரூபாய்.

திறமையில்லாமல் ஒருவரால் மூன்றே படத்தில் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க முடியாது. முதலில் ஒருவரின் திறமையை பாராட்ட கற்று கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.

Atlee Atlee

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.