Thalapathy 63 Movie

Thalapathy 63 Movie : தளபதி 63 படத்தை பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ எனக்கு பயமில்லை என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ. இவர் இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி படமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தை அடுத்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டும் பிரம்மாண்ட ஹிட் படங்களை கொடுத்த அட்லீ மூன்றாவது முறையாக விஜயுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்க உள்ளார். நாயகி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உச்சத்தை தொட்டுள்ளது

இந்நிலையில் அட்லீ அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி 63 படத்தை பற்றிய பயம் உங்களுக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அட்லீ எனக்கும் எப்போதும் பயம் இல்லை. அதே போல் தான் தற்போதும் ஆனால் கொஞ்சம் பொறுப்பு கூடியுள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.