தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக அட்லீயுடன் கூட்டணி அமைக்க உள்ளார். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 எப்படி இருக்கும்? என கேட்டதற்கு அட்லீ பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இதற்கு முன்னதாக எங்களது கூட்டணியில் வெளியான மெர்சல், தெறி ஆகிய இரண்டு படங்களை காட்டிலும் இந்த படம் செம மாஸாக அதிரடியாக இருக்கும். நானும் சில விசயங்களை துணிந்து செய்ய உள்ளேன் என கூறி அல்ட்ராசிட்டியை கிளப்பியுள்ளார்.