விஜய் ஸ்டைலில் தனக்கு ஒரு படம் வேண்டும் என அட்லீக்கு பிரபல நடிகர் ஒருவர் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Atlee Next With Junior NTR : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

விஜய் ஸ்டைலில் எனக்கு ஒரு படம் வேணும்.. அட்லீக்கு கோரிக்கை வைத்த முன்னணி நடிகர் - அடுத்த கூட்டணி ரெடி??

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து சங்கி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அட்லி யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘தல’ டோனி பிறந்த நாள் : சில நிகழ்வுகள்..

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் அட்லீயிடம் விஜய் ஸ்டைலில் தனக்கு ஒரு கதை வேண்டும் என கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அட்லியும் கதை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே பாலிவுட் பறந்த அட்லி அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijaysethupathi ஹீரோ கிடையாது! – Actor Rahul Thatha Funny Speech | Rewind | HD