Atlee Next Movie Update
Atlee Next Movie Update

வேறு வழியில்லாமல் விஜய் படத்தையே மீண்டும் கையில் எடுத்துள்ளார் அட்லி.

Atlee Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் அட்லி. ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனரான இவர் அதன் பின்னர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

உங்களின் அடுத்த படம் அட்லீயோடவா? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் கொடுத்த பதில் இது தான்.!

தெறி திரைப்படம் விஜய் செம ஸ்டைலான ஹீரோவாக காட்டியதால் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து வெளியான மெர்சல் திரைப்படம் 250 கோடி வசூலையும் பிகில் திரைப்படம் 300 கோடி வசூலையும் தாண்டி வெற்றி பெற்றது.

ஆனால் அட்லி தேவையில்லாமல் செலவை அதிகப்படுத்தி விடுவதால் அவரை வைத்து படம் தயாரிக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அவர் மனைவியை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றும் செலவை எல்லாம் தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக அவர் ஷாருக்கானை வைத்து இயக்க இருந்த ஒரு படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதன் காரணமாக தற்போது அட்லி தெறி படத்தின் இரண்டாம் பாகத்தை கையிலெடுத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் படத்தை தெறி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் முன் வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தடைவிதித்தது போதும்.. கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி தாருங்கள் – தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தியதில் அட்லிக்கு பெரும்பங்கு உண்டு என்பதால் இந்த படத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் என கூறப்படுகிறது.