Atlee Next Movie Announcement
Atlee Next Movie Announcement

அட்லி இயக்கப் போகும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

Atlee Next Movie Announcement : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி.

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களைத் தொடர்ந்து அட்லி யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.

வேற லெவல் சார் நீங்க மாஸ்டர் பட பிரபலத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகி வரும் பதிவு

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அட்லியின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி பெரும்பாலும் ஷாருக்கானை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெளியாகியுள்ள புகைப்படத்தில் உள்ள உருவமும் ஷாருக்கான் மாதிரியே தோற்றமளிக்கிறது. அதே சமயம் அர்ஜுன் தாஸ் போலவே இருப்பதாகவும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.