சூர்யாவைப் போல் அட்லி தன்னுடைய படத்தை OTT வழியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Atlee in Andhaghaaram Release : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவரது இயக்கத்தில் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.

திருமணமான கிரிக்கெட் வீரர் மீது கிரஸ் – பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படம், பங்கமாக கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்.!

இந்த நிலையில் இவர் அந்தகாரம் என்ற படத்தை வெளியிட உள்ளார். இந்த படத்தை வி விக்னராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமசந்திரன், மிஷா கோஷல், ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அட்லி தன்னுடைய பேனரில் வெளியிடுகிறார். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இந்த படத்தையும் நேரடியாக OTT வழியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படியெல்லாமா செய்தார்? விஜயின் மனைவி குறித்து மேடையில் பேசி அதிர வைத்த அட்லீ மனைவி – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா தயாரித்து வந்த பொன் மகள் வந்தாள் என்ற திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லியின் அந்தகாரம் படம் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.