Director Atlee

Director Atlee : மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்களுக்கு அட்லீ சரியான பதிலடி கொடுத்து அரங்கத்தையே அதிர செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் முதல் முதலாக முருகதாஸின் தயாரிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தை அடுத்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்க தளபதி 63 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தற்போது அட்லீ மீம்ஸ் போட்டு தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அட்லீ குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் எவ்வளவோ ட்ரோல், மீம்ஸ் வந்தாலும் விடாமுயற்சியுடன் முன்னேறி கொண்டே செல்ல வேண்டும்.

கலாய்ப்பவர்களை போலவே நம்முடைய வெற்றியை கை தட்டி பாராட்டவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் என கூறியுள்ளார்.

அட்லீ இவ்வாறு பேசியது அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.