Atlee Busy on Sharukh Khan Movie

அட்லி தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியா அட்லி.

Atlee Busy on Sharukh Khan Movie : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அதன் பின்னர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களில் சூப்பர் ஹிட்டாகி இருந்த நிலையில் அட்லி அடுத்ததாக ஷாருக் கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார் அட்லி. தன்னுடைய டீமுடன் கையில் ஹெலிகாப்டர் மற்றும் கார் பொம்மைகளை வைத்து கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோவை அட்லியின் மனைவி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.