Atlee and Sharukh Khan Movie Update

அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Atlee and Sharukh Khan Movie Update : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் பாலிவுட் சினிமாவில் நடிகர் ஷாருக்கானின் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.

மேலும் சமீபத்தில் அட்லி மற்றும் அவரது குழுவினர் இணைந்து இந்த படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் தான் நடித்து வரும் பதான் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.