அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Atlee and Sharukh Khan Movie Title : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். ‌‌ ‌‌ இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

சுங்கச் சாவடிகளை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு தகவல்

இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு சங்கி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இதே இராணுவத்தை பின்புலமாகக் கொண்ட படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு ஜவான் என டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.