Atlee and Shahrukh Khan Movie Update
Atlee and Shahrukh Khan Movie Update

ஷாருக்கான் படம் அட்லி இயக்க இருந்த ஷாருக்கான் படம் ட்ராப் ஆகி விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Atlee and Shahrukh Khan Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக தெறி, மெர்சல், பிகில் என விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கினார்.

அடுத்ததாக அட்லி பாலிவுட் சினிமாவில் ஷாருக்கானை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் பிகில் படம் விமர்சன ரீதியாக சில எதிர்மறை கருத்துக்களையும் பெற்றதால் ஷாருக்கான் அட்லி படத்தில் இருந்து பின்வாங்கி கொண்டதாக தகவல்கள் வைரல் ஆகி இருந்தன.

வெப் சீரிஸில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் யார் தெரியுமா?

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அது உண்மை அல்ல, இந்த படத்திற்காக அட்லி தன்னுடைய பெரிய சம்பள தொகையில் பாதியை வாங்கி விட்டதாகவும் இப்படத்தின் அறிவிப்பு ஷாருக்கான் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு படமும் ஒரே நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்த படத்தை அட்லி முடித்துக் கொடுக்கவும் அதற்குள் விஜய்யும் முருகதாஸ், வெற்றிமாறன் படங்களை முடித்து விடுவார். அதன் பின்னர் தளபதியுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.