விமான நிலையத்திலிருந்து முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே வந்துள்ள அட்லி ஷாருக்கான் இருவரையும் கண்டு பிடித்த ரசிகர்கள் அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படம்தான் ‘ஜவான்’ . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் குட்டி டீசர் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.இந்த நிலையில் இப்படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்து எடுப்பதற்காக அட்லி மற்றும் ஷாருக்கான் இருவரும் அங்கு சென்றுள்ளனர். 

விமான நிலையத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த பிரபலங்கள் - ஆனாலும் அதை கண்டுபிடித்து வீடியோ எடுத்துள்ள ரசிகர்கள்.!!

அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து  அட்லி, ஷாருக்கான் இருவரும் முகத்தை மறைத்துக்கொண்டு பட குழுவோடு சென்றுள்ளனர்.ஆனாலும் இருவரையும் அசால்டாக கண்டுபிடித்துள்ள சில ரசிகர்கள் அவர்கள் செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.