Athlete Hima Das : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Hima Das

Athlete Hima Das :

செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவர் 23.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, போலந்தில் ஜூலை 2 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் தொடர்களிலும் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் !

சர்வதேச தடகளத்தில் 2 வாரத்துக்குள்ளாக 3 தங்கப் பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ள ஹிமாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும் இதனை தொடர்ந்து துருக்கியில் நடந்த யாசர் டோகு சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ எடை பிரிவில்,

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.பைனலில் ரஷ்யாவின் எகடரினா போல்ஷுக்குடன் நேற்று மோதிய வினேஷ் போகத் 9-5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

கடந்த வாரம் ஸ்பெயின் கிராண்ட் பிரீ தொடரில் தங்கம் வென்றிருந்த வினேஷ், தற்போது இஸ்தான்புல் தொடரிலும் முதலிடம் முடித்து முத்திரை பதித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.