Kuruthi Aattam

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி இடைவெளி இல்லாமல் மிக பிஸியாக நடித்து வருகிறார். MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் R கண்ணன் தாயாரித்து இயக்கும் இன்னும் தலைப்பிடாத “Production no 3” படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு புறம் அவர் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் “குருதி ஆட்டம்” படத்தை முடிக்கும் தருவாயில் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “குருதி ஆட்டம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

வழக்கமாக ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால் “குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வா முரளி குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினியை முதுகில் சுமந்து நிற்கிறார். வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது…

ரசிகர்களுக்கு கதையின் கரு இரு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது என்பதை உணர்த்தவே ஃபர்ஸ்ட் லுக் அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. “குருதி ஆட்டம்” படம் ஒரு விபத்திற்கு பிறகு நாயகனுக்கும் ஒரு பெண்குழந்த்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தை கூறுவதாகும். ஆக்‌ஷன் திரில்லர் வகைப்படமாக இப்படம் இருந்தாலும் மிக அழுத்தமான செண்டிமெண்ட் இப்படத்தில் இருக்கும். இதனைச் சுற்றியே மொத்த கதையும் அமைக்கப்பட்டிருக்கும் என்றார். மேலும் அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் படப்பிடிப்பு இடையில் தடைபட்டிருந்தாலும் இப்போது அனைத்து தடைகளும் நீங்கி, இம்மாத இறுதியில் மதுரை மாநகரில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மொத்த படக்குழுவிற்கும் பெரும் புத்துணர்ச்சி தந்துள்ளது. ஒரே கட்டமாக படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.

T. முருகானந்தம் Rockfort Entertainment சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவாணி சங்கர் நாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், ராதாரவி முக்கிய கதாப்பத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கும் அதிலும் பின்னணி இசை படத்திற்கு வேறொரு பரிமாணம் தந்து எல்லோரையும் கவரும் என்றார் இயக்குநர் ஶ்ரீகணேஷ்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.