Atharvaa About Murali Birthday
Atharvaa About Murali Birthday

இந்த சிரிப்பையும் அன்பையும் ரொம்ப மிஸ் பண்றோம் என இறந்துபோன நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் இயக்குனர் சேரன்.

Atharvaa About Murali Birthday : பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் முரளி. கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் பூவிலங்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த முரளி ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

நோட் பண்ணிக்கோங்க.. மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் ஆனா இதுதான் இந்திய அளவில் ட்ரெண்டிங்கா இருக்கும் – மாஸ் டயலாக் சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

மேலும் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அதர்வா, காவியா, ஆகாஷ் என 2 மகன் ஒரு மகள் பிறந்தனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி இவர் உயிரிழந்தார். தற்போது இவருக்கு பிறந்த நாள் என்பதால் அதர்வா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்பாவைக் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நீங்கள் மிகவும் கூலான மற்றும் வலிமையான மனிதர். அது எங்களுக்கு தெரியும். நாங்கள் உங்களை மிகவும் விரும்புகிறோம், மிஸ் செய்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த பதிவை அடுத்து இயக்குனர் சேரன் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு சிரிப்பையும் அன்பையும் மிகவும் மிஸ் செய்கிறோம் சார்.

ஹாப்பி பர்த்டே சார். இப்படிக்கு உங்கள் பாஸ் என கூறியுள்ளார்.

மேலும் அதே பதிவில் ஆமாம் முரளி சார் என்னை பாஸ் பாஸ் என்று தான் அழைப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு பதிவுகளையடுத்து பலரும் முரளி குறித்து தங்களது நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதர்வா தன்னுடைய அப்பா குறித்து பதிவிட்ட பதிவோடு சேர்த்து தன்னுடைய சிறு வயதில் அப்பாவின் தோள் மீது அமர்ந்து இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதர்வாவும் அவருடைய அப்பா முரளியும் பானா காத்தாடி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதர்வா அறிமுகமாகி இருந்ததும் இந்த படம் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

சேரன் மற்றும் அதர்வாவின் பதிவு குறித்து ரசிகர்கள் கருத்து :

இன்று தான் வெற்றிக்கொடி கட்டு படம் பார்த்தேன் சூப்பர் படம் சார் என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

அதர்வாவை வைத்து ஒரு படம் பண்ணுங்க என இன்னொரு நெட்டிசன் சேரனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இன்னொரு ரசிகர் பானா காத்தாடி பட நிகழ்ச்சியின் போது அதர்வாவும் முரளியும் அண்ணன் தம்பி போல அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்து இன்னும் நினைவில் இருப்பதாக கூறியுள்ளார்.

அதர்வாவின் பதிவைப் பார்த்த ஒருவர் உங்கள் தந்தையின் நடிப்பை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அவரின் தீவிர ரசிகன் நான். நான் தனியாக படம் பார்க்க சென்ற என் 12 வயதிலிருந்தே அவரின் அனைத்து படங்களும் பார்த்து விடுவேன் நடிகர்களுக்கு உரிய ஒப்பனைகள் எதுவும் இல்லாத நம் எதார்த்த மனிதர்களோடு கலந்து போகும் நடிகர் எனக் கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் தம்பி அதர்வா நல்லதே நடக்கும் கலங்காதே எனக் கூறி என்னுடைய ஓட்டு ரஜினிக்கே என பதிவிட்டுள்ளார்.

இது போன்று இன்னும் பல ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.