Aswin With Shakeela Daughter

குக் வித் கோமாளி அஸ்வினும் நானும் எப்படி தெரியுமா என ஷகிலா மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Aswin With Shakeela Daughter : தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஷகிலா. படங்களில் நாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் காலெடுத்து வைத்த இவர் தடம்மாறி கவர்ச்சி நடிகையாக மாறினார். மலையாள திரையுலகில் இவருக்கென மாபெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பின்னர கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷகிலா பிரபல நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மனதில் இவர் மீதான கண்ணோட்டம் மாறியுள்ளது. தற்போது பலரும் ஷகிலாவை அம்மா என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

குக் வித் கோமாளி அஸ்வினும் நானும் எப்படி தெரியுமா?? ஷகிலா மகளின் அதிரடி பதிவு - தீயாக பரவும் புகைப்படங்கள்.!!

ஷகிலா திருநங்கை பெண் ஒருவரை மகளாக ஏற்று வளர்த்து வருகிறார். அந்தப் பெண் குக் வித் கோமாளி அஸ்வினுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிரதர் From Another Mother என குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.