அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன், தற்போது இந்த படம் தெலுங்குவில் ரீமேக்காகி வருகிறது.
தெலுங்குவில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அசுரன் பர்ஸ்ட் லுக்கில் தனுஷின் முகத்தில் தெரிந்த அதே வெறி தற்போது வெங்கடேஷ் முகத்திலும் தெரிகிறது, இந்த படத்திற்காக வெங்கடேஷ் அப்படியே தனுசாகவே மாறியுள்ளார்.
#Naarappa Shoot Begins Today! pic.twitter.com/SexcogRnaS
— Venkatesh Daggubati (@VenkyMama) January 22, 2020