Asuran Dhanush

Asuran Song : நடிகர் தனுஷ் ஆரம்பம் முதல் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்தான் பல படங்களில் நடித்துவந்தார்.

பின்னர் செல்வராகவன் – யுவன் கூட்டணின் பிரிந்ததால் தனுஷும் யுவனுடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்திக்கொண்டார்.

கோடையை குறி வைத்து வெளியாகும் 15 படங்கள் – உங்க சாய்ஸ் எது?

இந்த இடைவெளியில் தனுஷுடன் கூட்டணியமைத்து பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்.

இந்த பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன என இந்த கூட்டணி இணைந்த அனைத்து படங்களின் அனைத்து பாடல்களும் வெற்றி பாடல்களாக அமைந்தன.

பின்னர் ஜி.வி.பிரகாஷுடனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தனுஷ், தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் அசுரன் படத்திற்கு ஜி.வி.தான் இசை.

நடிகராக தன்னுடைய பிஸி ஷெட்யூலில் சில நாட்களை ஒதுக்கி இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி., இப்படத்தின் இசை குறித்த தகவல்களையும் அவ்வப்போது தன்னுடைய டிவிட்டர் தளத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அசுரன் படத்தில் தனுஷ் இப்படி செய்கிறாரா? – எதிர்பார்ப்பை அதிகரித்த அப்டேட்.!

அந்தவகையில் தற்போது ஜி.வி. வெளியிட்டுள்ள பதிவில், அசுரன் படத்தின் இரண்டு பாடல்களுக்கான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இவை இரண்டும் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் குத்தாட்ட பாடல்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஜி.வி.-யின் இந்த ட்வீட்டால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.