Asuran Shooting Spot Video
Asuran Shooting Spot Video

அசுரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் வெற்றிமாறனுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Asuran Shooting Spot Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தை கொடுத்த படமாக அசுர அளவிலான வெற்றி பெற்றது.

மூவரின் மரணத்தால் உடைந்து போய் விட்டேன் – சிம்பு வெளியிட்ட உருக்கமான அறிக்கை

சிவசாமி என்ற கதாபாத்திரமாகவே தனுஷ் வாழ்ந்திருந்தார். தற்போது அசுரன் சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷும் வெற்றிமாறனும் எதையோ விவாதித்துக் கொண்டே நடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CByUQMwBHev/?igshid=18iv6eexu1b87

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.