Asuran Release in China
Asuran Release in China

ரஜினியின் படத்திற்கு பிறகு சீன மொழியில் தனுஷின் திரைப்படம் இந்தப் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Asuran Release in China : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், டிஜே, கருணாஸின் மகன் கென் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன்.

கார்த்திக் நரேன் படத்தில் ஆயுதத்தை எடுத்த தனுஷ் – இது ரசிகர்களை குஷியாக்கும் வெறித்தனமான அப்டேட்!

மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும் மஞ்சுவாரியர் வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். சமீபத்தில் பிரியாமணியின் பிறந்த நாளன்று அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

கோவிலில் எளிமையாக நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணம்?

மேலும் இப்படம் தற்போது சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ரஜினிக்கு பிறகு தனுஷின் திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்படுவது ரசிகர்களை பிசியாகி உள்ளது. தலைவன் உலக அளவில் மாஸ் காட்டுகிறான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்