Asuran Movie Story : Vetri Maaran Revealed Asuran's Story | Dhanush | Ken | Ammu Abhirami | Kollywood Cinema News | Tamil Cinema News
அசுரன் படத்தின் கதை என்ன என்பது பற்றி வெற்றி மாறனே கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Asuran Movie Story : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றி மாறன்.

இவர் ஏற்கனவே தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மூன்று படங்களை இயக்கி விட்டார். தற்போது நான்காவது முறையாக கூட்டணி அமைத்து அசுரன் படத்தினை இயக்கியுள்ளார்.

ஹீரோ படத்திற்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம் – பஞ்சாயத்து இன்னும் முடியலையா?

இந்த படம் நாளை அதாவது அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தின் கதை பற்றி பேசியுள்ளார்.

அதாவது இப்படத்தில் 15-வயது சிறுவன் கொலை ஒன்றை செய்து விட, அவனை காப்பாற்ற அவரது தந்தை காட்டிற்கு அழைத்து செல்கிறாராம்.

லைவ்வாக சண்டை போட்ட அபிராமி, சாக்ஷி அகர்வால், அதுவும் இதுக்காக – புகைப்படங்களை பாருங்க

அங்கிருந்து தான் முன்கதை, பின்கதை என மாறி மாறி படம் நகரும் என கூறியுள்ளார். மேலும் இப்படம் அப்பா மகனின் பாசத்தை ஆழமாக பேசும் படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.