Asuran Movie Story : Vetri Maaran Revealed Asuran's Story | Dhanush | Ken | Ammu Abhirami | Kollywood Cinema News | Tamil Cinema News
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.

Asuran movie collection made distributors upset – விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகர் தனுஷுக்கு அவ்வளவு ரசிகர்களோ, ஓப்பனிங்கோ கிடையாது. ஆனால், ரசிகர்களை கவர்ந்த அவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபில் ஹிட் அடிக்க தவறியதே இல்லை. இதற்கு அவரின் முந்தையை பட படங்களே சாட்சி.

dhanu

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் அசுரன். இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறிய விலைக்கு இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை. எனவே, படத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இப்படத்தை தாணு சொந்தமாக வெளியிட்டார். படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.

Asuran Movie Review

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.30 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒட்டுமொத்த லாபமும் தானுவுக்கு செல்லும். இதை வைத்துப் பார்க்கும் போது அசுரன் திரைப்படம் தாணுவிற்கு மிகப்பெரிய வசூலை பெற்றுத்தரும் என தமிழ் சினிமா உலகின் கூறுகிறார்கள்.