asuran

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களுக்கு இருப்பது போல் நடிகர் தனுஷுக்கு அவ்வளவு ரசிகர்களோ, ஓப்பனிங்கோ கிடையாது. ஆனால், ரசிகர்களை கவர்ந்த அவரின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபில் ஹிட் அடிக்க தவறியதே இல்லை. இதற்கு அவரின் முந்தையை பட படங்களே சாட்சி.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து 2 வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் அசுரன். இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறிய விலைக்கு இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை. எனவே, படத்தின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக இப்படத்தை தாணு சொந்தமாக வெளியிட்டார். படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் அசுரன் அதிக வசூலை பெற்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் டாலர்களை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அங்கு திரையிடப்பட்ட அஜித் படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களின் வசூலை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.