
ஜப்பானில் அசுரன் படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தில் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Asuran in Osaca International Films Festival : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.

தற்போது இந்த படம் ஜப்பானில் புதிய சாதன படைத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் வசனத்தை படம் திரையிடப்பட உள்ளது. வரும் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.