Asuran

Asuran Heroine : அசுரன் படத்தின் கதாநாயகி யார் என்ற தகவலை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

அசுரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அதிரடியாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இதனையடுத்து மீண்டும் சத்தமில்லாமல் தனுஷ் அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் திறமையான நடிகை மஞ்சு வாரியருடன் சேர்ந்து நடிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.