AsuraGuru
ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ 5.75 கோடி கொள்ளை என ஆரம்பிக்கும் அசுரகுரு படத்தின் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Asuraguru Promo Video  : ராஜ்தீப் சிங் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரகுரு.

நாளை இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன்களும் பரபரப்பாக நடந்து வருகின்றனர். இப்படத்தின் டீஸர், ட்ரைலர் போன்றவைகள் மக்கள் மத்தியிலும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்?? அசுரகுரு பாடல் சொல்ல வருவது என்ன?

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் ட்ரைனில் கொண்டு வரப்பட்ட ரூ 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தி வாசிக்கப்படுகிறது.

இதனால் அசுரகுரு ரயிலில் நடந்த கொள்ளை, இலங்கை தமிழர் பிரச்சனை போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ள படமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் நாளை முதல் ( மார்ச் 13 ) திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.