AsuraGuru Movie Review
ராஜ்தீப் சிங் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், நண்டு ஜெகன், யோகி பாபு இன்னும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அசுரகுரு. இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

AsuraGuru Movie Review : 

படத்தின் கதைக்களம் :

சிறு வயதில் இருந்தே பணத்தை பார்த்தாலே திருடி வைத்து கொள்ளும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் ஹீரோ விக்ரம் பிரபு.

அப்படி சின்ன வயதில் சிறுசு சிறுசா திருடிய விக்ரம் பிரபு பெரியவன் ஆனதும் பெரிய அளவில் திருட்டு வேளைகளில் ஈடுபடுகிறது.

உண்மை சம்பவம் ரயியில் நடந்த கொள்ளையை போல இந்த படத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. கொள்ளையடித்த பணத்தையெல்லாம் விக்ரம் பிரபு என்ன செய்கிறார்? இதனால் என்ன நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

துருவ் விக்ரம் வெளியிட்ட சிங்கிள் போட்டோ.. முத்தமா கொடுக்கும் பெண்கள் கூட்டம் – வைரலாகும் புகைப்படம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

விக்ரம் பிரபு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளார்.

மஹிமா நம்பியார் சும்மா டூயட் பாடுவதற்கு மட்டும் வந்து செல்லாமல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

யோகி பாபு சும்மா ரெண்டு காட்சிக்கு வந்து சென்று விடுகிறார். இந்த படத்திற்கு மொத்தமாகவே இரண்டு நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல.

தொழில்நுட்பம் :

இசை :

கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைக்க சைமன் கே கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இருவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு :

ராமலிங்கம் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.

இயக்கம் :

ராஜ் தீப் சிங் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பு
2. கதைக்களம்
3. சண்டை காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. சீரியஸான படம் என்பதால் காமெடி இல்லாமல் போனது.

REVIEW OVERVIEW
அசுரகுரு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
asuraguru-movie-review-2மொத்தத்தில் அசுர குரு விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான படம்.