
Asin : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் அசின்.
பிரபல நடிகையாக வலம் வந்த போதே மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராகுலை திருமணம் செய்து கொண்ட குடும்ப பெண்ணாக செட்டிலாகி விட்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாத அசினுக்கு கடந்த அக்டோபர் 24-ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது.
தற்போது அசினின் குழந்தைக்கு முதல் பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவிட அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அசினின் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அசின் விஜயுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் என மூன்று படத்திலும் அஜித்துடன் ஆழ்வார், வரலாறு என இரண்டு படத்திலும் சூர்யாவுடன் கஜினி, வேல் என இரண்டு படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.