Asim As Hero in New Movie

சிவகார்த்திகேயன் பாணியில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறக்க உள்ள பிரபல சன் டிவி சீரியல் நடிகர்.

Asim As Hero in New Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்து அதன் பின்னர் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கி ஹீரோவாக கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.


தமிழ் ஞானியின் சத்ய ஞானசபை உணர்வோம்.!

இவரைப்போல சின்னத்திரையிலிருந்து ரியோ ராஜ், மா கா பா ஆனந்த் என பல தொகுப்பாளர்கள் வெள்ளித் திரைக்கு அறிமுகமாகி இருந்தாலும் அவர்களால் பெரிதளவில் ஜொலிக்க முடியாமல் இருந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவேஉனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அசீம் வெள்ளித்திரையில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா Divorce ரொம்ப கஷ்டமா இருக்கு – Interview With Actor G.Marimuthu | Marutha Movie

கல்லூரி காதலை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படம் நேரடியாக zee5 இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அசிம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் சிவகார்த்திகேயனின் போல இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் அதிர்ஷ்டம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.