Asian Volleyball Match : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship, Pro KabaddiLeague

Asian Volleyball Match :

ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 3-1 என, ஓமனை வென்றது.

ஈரானில், ஆண்களுக்கான 20வது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. இந்திய அணி, ‘சி’ பிரிவில் ஓமன், கஜகஸ்தான், சீனா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கி – இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!

முதல் லீக் போட்டியில் கஜகஸ்தானை தோற்கடித்த இந்திய அணி, 2வது லீக் போட்டியில் சீனாவிடம் வீழ்ந்தது.

மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, ஓமன் அணிகள் மோதின. இதன் முதல் செட்டை 22-25 என இழந்த இந்திய அணி, பின் எழுச்சி கண்டு அடுத்த 3 செட்களை 25-12, 25-21, 25-19 எனக் கைப்பற்றியது.

முடிவில் இந்திய அணி 3-1 (22-25, 25-12, 25-21, 25-19) என்ற கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.