Asia Hockey : ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 5-வது ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நடைப்பெற்றது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. இந்நிலையில் இப்போட்டி, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இடியுடன் கூடிய மழையால் ரத்து செய்யப்பட்டது.
எனவே, இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, ஆசிய போட்டியின் ட்ராபியை இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் பகிர்ந்து கொண்டனர்.
இதனை அடுத்து இத்தொடரின் சிறந்த கோல் கீப்பராக இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் தொடர் நாயகனாக இந்தியாவின் ஆகாஷ் தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மூன்றாவது இடத்தில் இருந்த மலேசிய அணி வெண்கலம் பெற்றது