Asia Cup

Asia Cup 2019 : ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019-இல் இந்தியா அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஜன. 5-இல் தொடக்கம்:

அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை 17ஆவது ஏஎஃப்சி கோப்பை நான்கு நகரங்களில், எட்டு ஆடுகளங்களில் நடக்க உள்ளது.

இதில் மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்று அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெரும்.

அதே போல முதல் 4,3 இடங்களை பெறும் அணிகளுக்கு நாக்கவுட் சுற்று (ரவுண்ட்16) முன்னேறும்.

இந்தியா தகுதி :

பிஃபா தரவரிசையில் இந்தியா அணி 97-வது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்பு 1964, 1984, 2011 ஆண்டுகளில் இந்திய அணி தகுதி பெற்றது. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து, 4-வது முறையாக தற்போது தகுதி பெற்றிருக்கிறது.

ஏ பிரிவில் முதலிரண்டு இடங்களில் இந்தியா இருந்தால் நேரடியாக நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறும். போட்டியில் வலிமையான பஹ்ரைன் அணியும், போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் அணியும் வலிமையாக களத்தில் உள்ளது. அதே சமயத்தில் தாய்லாந்து வலுகுறைந்த அணியாகும்.

முதலிடம் பெற்றால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பெறும்.

இந்திய அணி பயிற்சி:

பயிற்சியாளராக உள்ள கான்ஸ்டான்டைன் பயிற்சியின் கீழ் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி தலமையில் உள்ள அணி கடந்த ஓராண்டாகவே தீவிரமாக விளையாடி வருகின்றது. மற்றும் ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் நிலையில் சீனா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட அணிகளுடன் நட்பு ஆட்டங்களில் ஆடியது.

தொடர்ந்து 11-க்கு மேற்பட்ட போட்டிகளில் வெற்றி மற்றும் டிரா கண்டு தோல்வியே காணாத அணியாகவும் திகழ்கிறது இந்திய அணி.

இந்தியா அணி போட்டி அட்டவணை :

தேதி : ஜன.6, இந்தியா – தாய்லாந்து,

இடம் : அபுதாபி- மாலை 5.30

தேதி : ஜன.10, இந்தியா- ஐக்கியஅரபு அமீரக நாடுகள்

இடம் :அபுதாபி – இரவு 8.00

தேதி : ஜன.14, இந்தியா – பஹ்ரைன்,

இடம் : ஷார்ஜா. இரவு 8.00

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.