ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் திக்குமுக்காடிப் போயுள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

Ashwin New Milestone in Instagram : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர்களில் ஒருவர் அஸ்வின்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

ரசிகர்கள் கொடுத்த அன்பால் இன்று திரையுலகில் நல்ல நல்ல வாய்ப்புகள் அவரைத் தேடிச் செல்கின்றன. பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோர் எண்ணிக்கை மூன்று மில்லியனாக உயர்ந்துள்ளது.

ரசிகர்கள் கொடுத்த ஆதரவு.. திக்குமுக்காடிப் போன குக் வித் கோமாளி அஸ்வின் - என்ன விஷயம் தெரியுமா??

இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் லைவ்வில் வந்து கொண்டாடியுள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தன்னுடைய கலகலப்பான சிரிப்போடு பதிலளித்துள்ளார். இதற்கிடையே சிவாங்கி இன்ஸ்டாகிராமில் ஹாய் மன்னா வெல்கம் டூ கிளப் கமெண்ட் அடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் குஷியாகி உள்ளனர்.

சிவாங்கி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினே என கூறியதால் அனைவரும் அவரை அப்படியே அழைக்கத் தொடங்கினர். தற்போது சிவாங்கி கூறியபடி பலரும் மன்னா என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா? 

எனக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என ஒரு நாளும் நான் நினைத்ததில்லை. ஆனால் இதற்காக ஏங்கி இருக்கிறேன். அதைத் தற்போது தான் நடக்கிறது என உருக பேசியுள்ளார். மேலும் எனக்கு பணபலமும் படைபலமும் இல்லை ரசிகர்கள் தான் என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என மனமுருகி பேசியுள்ளார்.