சர்ச்சைகளைத் தாண்டி சூப்பர் டூப்பர் இயக்குனருடன் கைகோர்த்து உள்ளார் அஸ்வின்.

Ashwin in Upcoming Movie Update : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின்.

நல்ல ஞானமும் செல்வ சேர்க்கையும் தரும், பிரம்ம முகூர்த்த வழிபாடு..

ஏற்கனவே பல ஆல்பம் பாடல்களில் பார் நடித்துள்ள இவர் தற்போது என சொல்ல போகிறாய் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அஸ்வின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

40 கதை கேட்டேன். அனைத்துக்கும் தூங்கிவிட்டேன். எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். நான் தூங்காமல் கேட்ட கதைதான் என்ன சொல்லப் போகிறாய் என பேசினார். இவருடைய இந்த பேச்சை ஆணவப் பேச்சு என நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

250 ரூபாவுக்கே இப்படியா..? விலையை கேட்டு Shock-கான வனிதா விஜயகுமார்.!

இதனால் ஒரு கட்டத்தில் அஸ்வின் ஆர்வக்கோளாறில் பேசியதாக மன்னிப்பு கேட்டார். இதையெல்லாம் தாண்டி தற்போது இவர் சூப்பர் டூப்பர் இயக்குனருடன் அடுத்த படத்திற்காக கைகோர்த்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‌‌

ஆமாம் அஸ்வின் அடுத்த படத்தை பிரபு சாலமன் இயக்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காடு, மலை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது அஸ்வின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.