அஸ்வின் மற்றும் சிவாங்கி திருமணம் செய்துகொண்டது போல வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ashwin and Shivangi Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி. சிவாங்கி இதற்கு முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விழாவில் இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.

இன்றைய ராசி பலன்.! (23.6.2021 : புதன் கிழமை)

அஸ்வின் மற்றும் ஷிவாங்கிக்கு திருமணம் முடிந்து விட்டதா?? வைரலான ஷாக் வீடியோ

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகியோரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தற்போது சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் மற்றும் உதயநிதி நடிக்கும் ஆர்டிக்கள் 15 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் அஸ்வின் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் புகழ் காமெடியன் வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். ஆனால் அந்த வீடியோ உண்மை இல்லை. மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளனர்.

மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா!