Ashima Narwal Speech : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thalapathy Vijay

Ashima Narwal Speech :

சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொலைக்காரன்’. அந்தப் படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால்.

இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர். ஆஷிம்ஆவிடம் பேசியபோது சினிமா, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:-

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

பிறந்தது இந்தியா. படிச்சது ஆஸ்திரேலியா. படிக்கும் போது விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்கள் பிடிக்கும் என்றாலும் நான் நடிகையாகவேன் என்று ஒருப்போதும் நினைத்ததில்லை.

படிப்பு முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டுமே.

முதல் முயற்சியிலேயே ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்’ பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைப்பெற்ற அழகிப் போட்டியில் ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டம் கிடைத்தது.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்.

அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

‘கொலைக்காரன்’ அனுபவம்?

‘கொலைக்காரன்’ என்னுடைய கேரியரில் அது பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடைந்திருக்காது.

அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர்களுடைய சினிமா அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.

அடுத்து?

‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும்.
படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

படத்தில் முக்கியமான பாத்திரத்தில் யானை நடிக்கிறது. யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தது. விலங்குகளின் டைமிங்கிற்கு ஏற்ப நடிப்பது உண்மையில் சவாலான விஷயம்.

யானையின் உடல் மொழிக்கு ஏற்றவாறு எப்படி நடித்திருப்பேன் என்று கற்பனை செய்து பார்த்தால் அதில் இருக்கும் கஷ்டம் தெரியும். யானை சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்தில் எடுத்தோம்.

அங்குள்ள உள்ளூர் யானை பாகனுடன் இனணைந்து வேலை செய்த போது பணிச் சுமை சற்று கூடியது. அவர்களுக்கு தாய் மொழி மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது.

மொழிப்பெயர்ப்பாளரை துணைக்கு வைத்து கொண்டு தான் எடுத்தோம். அந்தப் பாகன் யானைக்கு தன்னுடைய மொழியில் எடுத்து சொல்வார். இதற்காக இரண்டு மடங்கு உழைத்தோம்.

ஒருக் காட்சியில் ஆரவ்வை என் பக்கமாக நானும் தன் பக்கமாக யானையும் இழுக்க வேண்டும். கிட்டத்தட்ட பலப்பரீட்சை மாதிரி. அந்தக் காட்சியில் நான் இழுத்த மாதிரி காட்சி அமைய வேண்டும். ஆனால் யானை நிஜமாக தன் பக்கமாக ஆரவ்வை இழுக்க ஆரம்பித்த போது பதறிவிட்டோம்.

பப்பாளி பழத்தில் தான் சத்து என்றால், பப்பாளி இலையிலும் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!

சினிமாவில் உங்களுக்கு யார் போட்டி?

போட்டி இல்லாத துறை இல்லை. போட்டி இல்லை என்றால் உழைப்பு குறைந்துவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் போட்டி இருக்க வேண்டும். போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பது போல் தோன்றும்.

பிடித்த நடிகர்?

நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’ உடபட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.

பிடித்த நடிகை?

சாவித்திரி, நயன்தாரா.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.