சர்தார் 2 படத்தில் தெலுங்கு நடிகை இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் கார்த்தி. இவர் சர்தார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சர்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பி எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத் இன்னொரு ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இந்த அறிவிப்பை பட குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் இருப்பதாக சொன்னது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.