Arya's Apologies to Avan Ivan Controversy

அவன் இவன் படத்தின் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் ஆர்யா.

Arya’s Apologies to Avan Ivan Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அவன் இவன்.

இந்த படம் வெளியானபோது சிங்கம்பட்டி ஜமீனை காமெடியாக சித்தரித்து இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனையடுத்து சிங்கம்பட்டி ஜமீனின் மகன் சங்கர் ஆத்மஜன் என்பவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை அடுத்து ஆர்யா மற்றும் பாலா நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆர்யா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. என்னதான் சூட்டிங்கில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் ஜமீன் தரப்பு ஆர்யா பகிரங்க மன்னிப்பு கேட்டால் அவர் மீதான வழக்கை வாபஸ் பெற தயார் என்று கூறியது. இதனால் ஆர்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஜமீன் தரப்பும் அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது.

ஆனால் பாலா சிங்கம்பட்டி ஜமீனில் காமெடியனாக சித்தரித்ததால் அவர் மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டோம் என கறாராக தெரிவித்துள்ளது. இதனால் பாலாவின் மீது எந்த மாதிரியான நடவடிக்கை பாயும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ‌