தர லோக்கல் கெட்டப்பில் ஆரியன் மாஸ் காட்டும் ப்ரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தர லோக்கல் கெட்டப்பில் மாஸ் காட்டும் ஆரியன்.. ஒரே லுக்கிங் ஆஃப் ஆக்கிய பெண் - இணையத்தை கலக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ப்ரோமோ

மேலும் மாரி மற்றும் அமுதாவும் அன்னலட்சுமி என இரண்டு புத்தம் புதிய சீரியல்கள் கடந்த ஜூலை நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெகு விரைவில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆரியன் நாயகனாக நடிக்க மோக்ஷிதா என்பவர் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இவருடைய சகோதரிகளாக காயத்ரி யுவராஜ் மற்றும் பிரணிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மூன்று பெண்களுக்கு அம்மாவாக எதார்த்த நாயகியாக திரையுலகில் கொண்டாடப்பட்ட அர்ச்சனா நடிக்கிறார்.

இந்த சீரியலில் இருந்து ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக சூப்பர் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. தர லோக்கல் கெட்டப்பில் ஆரியன் கோவிலுக்கு வெளியே ஒருவரை விரட்டி விரட்டி வட்டிக்கு வாங்கிய பணத்தைக் கேட்க அப்போது அங்கு என்று கொடுத்து ஆரியனை ஆப் செய்கிறார் நாயகி மோக்ஷிதா.

தர லோக்கல் கெட்டப்பில் மாஸ் காட்டும் ஆரியன்.. ஒரே லுக்கிங் ஆஃப் ஆக்கிய பெண் - இணையத்தை கலக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ப்ரோமோ

மோக்ஷிதாவின் அழகை பார்த்து அப்படியே பம்புகிறார் ஆரியன். பிறகு ஆரியன் உங்க பேர் என்ன என கேட்க ஒழுங்கா வீடு போய் சேரு என பஞ்ச் டயலாக் கொடுக்கிறார் நம்ம நாயகி. இந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. ப்ரோமோவை பார்க்கும் போதே சீரியல் சூப்பரா இருக்கும்னு தெரியுது என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Meenakshi Ponnunga (மீனாட்சி பொண்ணுங்க) | விரைவில் உங்கள் ஜீ தமிழ் - ல்