Arya
ஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்கப்பட்ட நடிகையை இழுத்து முத்தம் கொடுத்து படக்குழுவிற்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் மதராசபட்டினம் பட நடிகை.

தமிழ் சினிமாவில் ஏ. எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மதராசபட்டினம்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு தங்கச்சியாக சிறிய வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தவர் லீமா.

இவர் தற்போது தமிழ் செல்வன் இயக்கத்தில் உருவாகி வரும் ” உதய் ” படத்தில் நடிக்கிறார். உதய் என்பவர் தான் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் இவரே படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த படத்தில் நாயகன் நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது உதய் முத்தம் கொடுக்க தயக்கம் காட்டியுள்ளார்.

இதனை அறிந்த லீமா நடிப்பு தானே, தயக்கம் எதுக்கு என கூறி அவரை இழுத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த படக்குழுவினர் இந்த பொண்ணு என்னவொரு தைரியம் என வியந்துள்ளனர்.

Actress Leema

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.