நடிகர் ஆர்யா தனது மகள் அழகான விளையாடும் வீடியோவாக பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது விருமன் திரைப்படம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, பாக்யராஜ், விஜி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் ஆர்யா தற்போது தனது மகள் அரியானாவுடன் கொஞ்சி விளையாடும் அழகான வீடியோ ஒன்றை பதிவிட்டு அதற்கு காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்துக்கான என் ஹேர்ஸ்டைலிஸ்ட் இவர் தான் எனவும் க்யூட்டாக கேப்ஷன் ஒன்றை பதிவிட்டு பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.