Arya Sayesha Marriage

Arya Saayesha Marriage : எல்லாமே நடிப்பா ஆர்யா என ரசிகர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகையுமான ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா பிரபல நடிகையான சாயீஷாவை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இன்று ஆர்யா மற்றும் சாயீஷா இருவருமே அந்த கிசுகிசுக்களை அனைத்துமே உண்மை. இருவருக்கும் வரும் மார்ச் மாதத்தில் திருமணம் என ட்விட்டரில் அறிவித்து விட்டனர்.

இவர்களின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவிற்கும் சாயீஷாவிற்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் ஆர்த்தியும் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். கூடவே ஒரு குண்டையும் தூக்கி போட்டுள்ளார்.

அதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நீங்கள் இருக்கும் போதே எனக்கு சந்தேகம் எழுந்திருந்தது. என கூறியுள்ளார்.

இதனால் நெட்டிசன்களுக்கும் 12 பொண்ணையும் வேணானு சொன்னதுக்கு இது தான் காரணமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பலரும் அது அத்தனையும் நடிப்பா ஆர்யா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here