உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு தெரியல என ஆர்யா சினேகாவிடமே ஐடியா கேட்க அவர் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான டான்ஸ் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ்.

உங்களை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரியல... சினேகாவிடமே ஐடியா கேட்ட ஆர்யா - அவங்க சொன்ன பதில் என்ன தெரியுமா??

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வர இதனை மிர்ச்சி சிவா தொகுத்து வழங்குகிறார். பாபா பாஸ்கர் மாஸ்டர் சினேகா மற்றும் சங்கீதா என மூவர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் பக்தி பாடல்கள் ரவுண்டு நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த வாரம் பிரீ ஸ்டைல் ரவுண்ட் நடைபெறுகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வரும் நிலையில் இந்த வாரம் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சினேகாவை பார்த்து நயன்தாராவிடம் பேசிய டயலாக்கான உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு சத்தியமா தெரியல என சொல்ல சினேகா நயன்தாராவை போல பாடேன் என பதில் அளித்துள்ளார்.

உங்களை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரியல... சினேகாவிடமே ஐடியா கேட்ட ஆர்யா - அவங்க சொன்ன பதில் என்ன தெரியுமா??

இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது. கடந்து வந்த வாரங்களை காட்டிலும் இந்த வாரம் நிகழ்ச்சி செம விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.