தங்கலான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஆர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது.
மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாளவிகா மோகனன் ,பார்வதி, பசுபதி ,டேனியல் கால்டாகிரோன், ஹரிகிருஷ்ணன் அன்புதுரை போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இது மட்டும் இல்லாமல் பிரபலங்களும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன, அந்த வகையில் நடிகர் ஆர்யா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மகத்தான பிளாக்பஸ்டருக்கு வாழ்த்துக்கள், இது மட்டும் இல்லாமல் இப்படிப்பட்ட அசல் திரைக்கதை மற்றும் எழுத்து சர்வதேச தரத்தில் சிறந்து விளங்கும். சியான் சார் வில் எடு u on screen ,ஜிவி பிரகாஷ் டார்லிங் வேற லெவல் பிஜிஎம்& சாங்ஸ் என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.